அஜீத் பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

அஜீத் பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்!
அஜீத் பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

’பில்லா 2’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த புரூனா அப்துல்லாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜீத் நடித்த படம், ’பில்லா 2’. இதில் பார்வதி ஓமனக்குட்டனுடன் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர், புருனா அப்துல்லா.  பிரேஸில் மாடலான இவர், இந்தி படங்களில் நடித்து வந்தார். தேசி பாய்ஸ், ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், கிராண்ட் மஸ்தி உட்பட சில இந்திய படங்களில் நடித்துள்ள இவர்,  ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ’அல்’  (Al ) என்பவரைக் காதலித்து வந்தார். சில வருட காதலுக்குப் பின் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமிம் வெளியிட்டுள்ளார் புருனா. ‘ அல், என்னை இளவரசி போல் நடத்துகிறார். நான் இந்த உலகின் அதிர்ஷ்டமான பெண் என உணர்கிறேன். இந்த வியப்பு அழகானது. கடந்த 2 வருடமாக காதலித்து வந்தோம். என் கனவாக உள்ள இவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன்’ என்று புருனா தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com