\
உலகை உலுக்கிய புரூஸ்லி கொண்டாட்டத்தில் நீத்து சந்திரா

உலகை உலுக்கிய புரூஸ்லி கொண்டாட்டத்தில் நீத்து சந்திரா

உலகை உலுக்கிய புரூஸ்லி கொண்டாட்டத்தில் நீத்து சந்திரா
Published on: 

உலகை உலுக்கிய புரூஸ்லியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடிகை நீத்துசந்திரா கலந்து கொண்டார்.

குங்ஃபூ என்ற உடன் முதலில் நினைவுக்கு வருகிற முகம் புரூஸ்லி. அவரது 77 வயது பிறந்தநாள் இன்று. அதை கொண்டாடும் நோக்கில் அவரது புகைப்படத்தை திறந்து வைத்தார் நீத்துசந்திரா. இவர் அதற்கான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்தை திறந்து வைத்து பேசிய அவர் “என் குழந்தைப் பருவத்தின் கனவு நாயகன் புரூஸ்லி. அவர்தான் என் வழிகாட்டி. ஒவ்வொரு பெண்ணும் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக என் அம்மாவுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். நான் இன்றைக்கு என்னவாக இருக்கிறேனோ அதற்கு அவர்தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com