பிரேக்அப் ஆன கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி காதல்

பிரேக்அப் ஆன கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி காதல்
பிரேக்அப் ஆன கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி காதல்

கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி இடையே நடந்த காதல் பிரேக்அப் ஆனது என்று இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

கெளதம் கார்த்திக் மற்றும் நிக்கி கல்ராணி நடித்து வரும் படம் ஹரஹர மஹாதேவகி. இந்தப் படத்தின் கதை இந்தக் காலத்து இளைஞர்களிடம் நிலவும் பிரேக்அப் கலாச்சாரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் காமெடி ரோல் செய்திருக்கிறார். இதுவரை மொட்டையாகவே இருந்த அவரது தோற்றம் இந்தப் படத்தில் வித்தியாசமாக அமைந்துள்ளது.

படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “நிக்கி கல்ராணியை காதலிக்கிறார் கெளதம் கார்த்திக். அந்தக் காதல் பிரேக்அப் ஆகிவிடுகிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரேக்அப் குழப்பங்களை இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். கெளதம் நல்ல மனிதர். மிக இயல்பாக பழகுபவர். நிக்கியும் அப்படிதான். கலகலப்பான ஹீரோயின் என்றவர் எனது அடுத்த படம் ஹாரர் கலந்த இளமையான கதை” என்று கூறினார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com