\
தாத்தா ஆனார் காமெடி நடிகர்

தாத்தா ஆனார் காமெடி நடிகர்

தாத்தா ஆனார் காமெடி நடிகர்
Published on

பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் தாத்தா ஆனார்.

தமிழில் மொழி, பயணம், வானம், தோனி, அஞ்சான், வாலு உட்பட பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம். இவரது மகன் கவுதம். இவர் சில தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகராக வரமுடியவில்லை. இவருக்கும் ஜோத்ஸ்னாவுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பமாக இருந்த ஜோத்ஸ்னாவுக்கு நேற்று அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து அனைவருக்கும் இனிப்பு கொடுத்து, தான் தாத்தா ஆனதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார் பிரம்மானந்தம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com