விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்
விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
கடந்த ஆண்டு வெளியான ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்திருக்கிறார்.
முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.