REWIND 2024 | தமிழ்நாட்டில் ஹிட்டான தமிழ் மற்றும் பிற மொழி படங்கள்!
இந்தாண்டு தமிழ்நாட்டில் ஹிட்டான படங்களில் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட குறைவுதான். காரணம் 2024ன் முதல் பாதியில் பெரிய ஹிட் எதுவும் அமையாமல் போனதே. ஆனால் இந்த கடைசி ஆறு மாதங்கள் நல்ல நம்பிக்கை அளித்த படங்கள் வந்து, நல்ல கலெக்ஷன் அமைந்தது. அப்படி தமிழ்நாட்டில் ஹிட்டான, கலெக்ஷன் அள்ளிய படங்கள் என்னென்ன, அதில் தமிழ் அல்லாத பிற மொழிப் படங்கள் என்ன என்பதைதான் இதில் பார்க்க போகிறோம்...
இந்த ஆண்டு தமிழ் அல்லாத சில படங்கள் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றது நாம் பார்த்ததே. அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்குப் படமான `புஷ்பா 2 தி ரூல்', 72 கோடி வசூலித்திருக்கிறது. சிதம்பரம் இயக்கிய `மஞ்ஞுமல் பாய்ஸ்' 65 கோடி வசூலித்துள்ளது, பிரபாஸின் `கல்கி 2898 ஏடி 43 கோடி, ஹாலிவுட் படமான `Godzilla x Kong: The New Empire' 36 கோடி மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் 17 கோடியும் வசூலித்துள்ளது. தமிழ் சினிமா பொறுத்தவரை லப்பர் பந்து, வாழை, லவ்வர் போன்ற படங்களும் நல்ல ஹிட்டாக அமைந்தன.
இந்தாண்டு தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் புஷ்பா 2. 2024ம் ஆண்டு இந்திய திரைப்படங்களில் வசூலில் முதலிடம் பிடித்திருக்கும் புஷ்பா 2, தமிழ்நாட்டில் பிடித்துள்ள இடம் ஐந்து. உண்மையில் புஷ்பாவின் வெற்றி அபாரமானது. கிட்டத்தட்ட 72 கோடி வசூலித்துள்ளது. நான்காம் இடத்தில் இருப்பது தனுஷ் இயக்கி நடித்த `ராயன்'. 80 கோடி வசூலித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் இருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ஜெயிலர் அளவுக்கு பேயாட்டம் ஓடி கலெக்ஷன் வரவில்லை என்றாலும், 106 கோடி வசூலித்துள்ளது. இதே ஆண்டின் துவக்கத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த `லால் சலாம்' தோல்விப்படமாக அமைந்தது. அதே வேளையில் `தளபதி' படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு கணிசமான வெற்றி பெற்றதும் குறிப்பிட வேண்டியது.
இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட் சிவகார்த்திகேயனின் `அமரன்'. இந்தப் படம் ஹிட்டாகும் என எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இப்படியான வெற்றி யாருமே எதிர்பாராதது. தமிழ்நாட்டின் முதல் வரிசை நட்சத்திரங்கள் எட்டும் வசூலைப் பிடித்து, தானும் ஒரு ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார். எல்லா காட்சிகளும் கூட்டம் நிறைந்து, 160 கோடி வசூலித்திருக்கிறது அமரன். இதே ஆண்டின் தொடக்கத்தில் சிவாவின் இன்னொரு படமான `அயலான்' வெளியானது. விமர்சனங்கள் முன் பின்னாக இருந்தாலும், வசூலில் டீசன்ட்டான நம்பரை எட்டியது.
பாக்ஸ்ஆபீஸ் சாம்ராட் என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறார் விஜய்.படத்தின் மீதான விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், படத்தின் வசூல் எந்த பாதிப்பும் அடையவில்லை. தமிழ்நாட்டில் 214 கோடி வசூலித்துள்ளது. படத்தில் இருந்த விஜய் ரெபரன்ஸ், முழுநேர அரசியலில் இறங்கும் முன், கடைசியாக நடிக்கும் இரு படங்களின் ஒன்று எனப் பல விஷயங்கள் படத்தின் ஹிட்டுக்கு காரணமாக சொல்லலாம். இந்தாண்டு தமிழ் சினிமா ஆச்சர்யங்களில் இன்னொரு விஷயமும் விஜய் படம் தான். `கில்லி' ரீ-ரிலீஸ் ஆகி பேயோட்டம் ஓடியது. ரீ-ரிலீஸ் 25 கோடி வசூல் செய்தது. இது கவனிக்காத தக்க நட்சத்திரங்கள் நடித்த படங்கள் கூட இப்படியான வசூல் செய்ததில்லை.
(கீழே இருக்கும் வசூல் விபரங்கள் துல்லியமானவை அல்ல, சில வேறுபாடுகள் இருக்கலாம்.)
10. Maharaja/Garudan - 50Cr
9. Indian 2 - 54Cr
8. Ayalaan - 56Cr
7. Manjummel Boys - 65Cr
6. Aranmanai 4 - 68Cr
5. Pushpa 2 - 72Cr
4. Raayan - 80Cr
3, Vettiyan - 106Cr
2. Amaran - 160Cr
1. The Greatest of All Time - 214Cr