பாலிவுட்டில் 90 சதவீதம் படங்கள் ப்ளாப்; ஆனால் பாகுபலி2 பாக்ஸ் ஆபீஸ் ஹிட்
பாலிவுட் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் 90 சதவீத படங்கள் தோல்வி அடைந்ததுள்ளன.
கடந்த ஆண்டு இந்திய அளவில் வெற்றி அடைந்த படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகதான் உள்ளது. தமிழில் மெர்சல், பாகுபலி2, விக்ரம் வேதா, அவள் உள்ளிட்ட சொற்பமான படங்கள் மட்டும்தான் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதிக அளவிலான படங்கள் தோல்வி அடைந்தன. இதற்கு பாலிவுட் சினிமாவும் விதிவிலக்கல்ல.
பாலிவுட்டில் 2017-ம் ஆண்டில் 286 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் நேரடியாக ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட படங்கள் 219. டப்பிங் செய்யப்பட்ட படங்கள் 59. ஆங்கில படங்கள் 3 ஆகும். ரிலீஸ் ஆன படங்களில் 257 படங்கள் பிளாப் ஆனதாக பாலிவுட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டைப் பொறுத்த வரை பாகுபலி2 படம்தான் அதிக வசூல் செய்த மெகாஹிட் திரைப்படம். அதற்கு அடுத்து சல்மான்கான் நடிப்பில் வெளியான டைகர் ஜிந்தாபாத் படம் மெகாஹிட் படம். இந்த இரண்டு படங்களை தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. லாலி எல்எல்பி2, ஹிந்தி மீடியம், டாய்லெட் உள்ளிட்ட படங்கள் சுமாரன அளவில் ஹிட் ஆனது. நியூட்டன், காஸி அட்டாக், தோர் உள்ளிட்ட படங்கள் முதலுக்கு மோசம் செய்யாத அளவில் வசூலானது.
பெரிய நட்சத்திரங்களைக் கொண்ட படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைவதும், குறைந்த பட்ஜெட் கொண்ட படங்கள் ஹிட் ஆவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை கவனித்தில் கொண்டு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் செயல்பட வேண்டும் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.