\
பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த ‘தி டார்க் டவர்’ திரைப்படம்

பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த ‘தி டார்க் டவர்’ திரைப்படம்

பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த ‘தி டார்க் டவர்’ திரைப்படம்
Published on

எதிர்பார்த்தது போலவே ‘தி டார்க் டவர்’ திரைப்படம் இந்த வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

உலகெங்கும் வெளியான மூன்று நாள்களில் இந்தத் திரைப்படம் சுமார் 130 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் கிங் கதையில், இட்ரிஸ் எல்பா நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தைக் காக்கும் துப்பாக்கி வீரனின் சாகசங்களை மையமாகக் கொண்டது. இந்தத் திரைப்படத்துக்கு மோசமான விமர்சனமே கிடைத்திருக்கிறது. இருப்பினும் ஸ்டீபன் கிங்கின் கதைக்காக மக்கள் ‌படம் பார்க்க வருகிறார்கள்.

கடந்த இரு வாரங்களாக முதலிடத்தில் இருந்த கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் திரைப்படம் இந்த வாரம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தி எமோஜி மூவி திரைப்படம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. திகில் மற்றும் மர்மக் கதைகளுக்கு பெயர் போன ஸ்டீபன் கிங்சுக்கு என்று உலகளவில் ரசிகர்கள் உள்ளதால் ‘தி டார்க் டவர்’ திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com