சினிமா
பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடிக்கும் தி ஹிட்மேன் பாடிகாட்!
பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடிக்கும் தி ஹிட்மேன் பாடிகாட்!
தி ஹிட்மேன் பாடிகாட் திரைப்படம் இரண்டாவது வாரமும் தொடர்ந்து வசூலில் முதலிடத்தை பிடிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் கணித்துள்ளது.
தி ஹிட்மேன் பாடிகாட் 64 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திகில் படமான அன்னபெல் திரைப்படம் 44 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இரண்டாவது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிமேஷன் திரைப்படமான 'லீப்' 32 கோடி ரூபாய் வசூலித்து மூன்றாவது இடத்தை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களை லோகன் லக்கி மற்றும் டன்கிர்க் ஆகிய திரைப்படங்கள் பிடிக்கும் எனவும் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் கூறியுள்ளது.