‘மங்காத்தா 2’ படத்தைத் தயாரிக்கிறாரா போனி கபூர்?

‘மங்காத்தா 2’ படத்தைத் தயாரிக்கிறாரா போனி கபூர்?

‘மங்காத்தா 2’ படத்தைத் தயாரிக்கிறாரா போனி கபூர்?
Published on

’மங்காத்தா’ படத்தின் அடுத்த பாகத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அஜீத், அர்ஜூன், த்ரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’மங்காத்தா’.  2011 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக, வெங்கட்பிரபு அவ்வப்போது பேட்டிகளில் கூறி வந்தார். இந்நிலையில் ’மங்காத்தா’ படத்தின் அடுத்த பாகத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்திப் பட தயாரிப் பாளருமான போனி கபூர் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

போனி கபூர், இந்தியில் ஹிட்டான ’பதாய் ஹோ’ என்ற படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். அயுஷ்ம ன் குரானா, நீனா குப்தா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கியிருந்தார். தேசிய விருது பெற்ற இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய, இயக்குனர் வெங்கட் பிரபுவை அணுகியுள்ளார் போனி கபூர். அப்போது, அவரி டம் ’மங்காத்தா’ படத்தின் அடுத்த பாகம் பற்றி வெங்கட்பிரபு கூறியுள்ளார். அதை தயாரிக்க முன்வருவதாக அவர் உறுதிய ளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

’பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கை அடுத்து வெங்கட்பிரபு, ’மங்காத்தா 2’-வை இயக்க இருக்கிறார் என்றும் அதை போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.


 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com