\
‘வலிமை’ சண்டைக் காட்சியில் மாஸ் காட்டும் அஜித் - படக்குழு வெளியிட்ட புதிய ப்ரோமோ

‘வலிமை’ சண்டைக் காட்சியில் மாஸ் காட்டும் அஜித் - படக்குழு வெளியிட்ட புதிய ப்ரோமோ

‘வலிமை’ சண்டைக் காட்சியில் மாஸ் காட்டும் அஜித் - படக்குழு வெளியிட்ட புதிய ப்ரோமோ
Published on: 

நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய ப்ரோமோவை தயாரிப்பாளர் போனி கபூர், தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’க்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் 2-வது முறையாக இணைந்துள்ள படம் ‘வலிமை’. அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கும் இந்தப் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தநிலையில், கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரேனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டு வரும்நிலையில், ‘வலிமை’ படமும் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ‘வலிமை’ படத்தில் ஹுமா குரேஷி, சுமித்ரா, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 3-வது முறையாக அஜித் - ஹெச் வினோத் - போனி கபூர் இணையவுள்ளனர். படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ‘வலிமை’ படத்தில் சண்டைக் காட்சி ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com