குஷி கபூருக்குக் கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட போனி கபூர், ஜான்வி கபூர்

குஷி கபூருக்குக் கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட போனி கபூர், ஜான்வி கபூர்
குஷி கபூருக்குக் கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட போனி கபூர், ஜான்வி கபூர்

தனது மகள் குஷி கபூருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார் தயாரிப்பாளர் போனி கபூர்.

போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதிகளின் இரண்டாவது மகள் குஷி கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரும், உறவினர்கள் அன்ஷுலா கபூர், ரியா உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்படிருந்த நிலையில் போனி கபூரின் இளைய மகள் குஷி கபூருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதனால், போனி கபூரும், சகோதரி நடிகை ஜான்வி கபூரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். ஜான்வி கபூர் ‘குட்லக் ஜெர்ரி’, ‘தோஸ்தானா 2’உள்ளிட்டப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com