\
” ‘வலிமை’ அனுபவத்தை ஜனவரி 13-லிருந்து பெறுங்கள்”- ரிலீஸ் தேதியை உறுதிசெய்த போனி கபூர்

” ‘வலிமை’ அனுபவத்தை ஜனவரி 13-லிருந்து பெறுங்கள்”- ரிலீஸ் தேதியை உறுதிசெய்த போனி கபூர்

” ‘வலிமை’ அனுபவத்தை ஜனவரி 13-லிருந்து பெறுங்கள்”- ரிலீஸ் தேதியை உறுதிசெய்த போனி கபூர்
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில், உலகம் முழுவதும் தியேட்டர்களில் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள போனி கபூர், “வலிமையின் அனுபவத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜன.13 முதல் பெறுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த டிச.30ம் தேதி, வலிமை திரைப்படத்தின் ட்ரையலர் வெளியாகியிருந்தது. வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவதையொட்டி தற்போது படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டிருந்தது படக்குழு. ‘வலிமை’ படத்திற்கு தணிக்கைக் குழுவிலிருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழகம் முழுக்க 700 லிருந்து 750 தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகள் என கிட்டத்தட்ட 3 மணிநேரப் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com