மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்.. இருவரிடம் விசாரணை

மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்.. இருவரிடம் விசாரணை
மணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்.. இருவரிடம் விசாரணை

சென்னையில் திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புதுச்சேரி குறித்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி புதுச்சேரி வளர்ச்சி கட்சி சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த இருவர் மணிரத்தனம் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்காவிட்டால் குண்டு வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள புதுச்சேரி வளர்ச்சிக் கட்சித் தலைவர் பாஸ்கரன், வெடிகுண்டு மிரட்டலுக்கும் அவரது கட்சிக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com