Why did Salman Khan's movie name changed says Apoorva Lakhia
Apoorva Lakhia, Maatrubhumiweb

சல்மான்கான் பட பெயர் மாற்றப்பட்டது ஏன்? - இயக்குநர் விளக்கம் | Salman Khan | Maatrubhumi

சல்மான்கான் சாரின் ரசிகர்களுக்குத் தலைப்பை மாற்றியது திடீரென நிகழ்ந்ததாகத் தோன்றலாம், ஆனால் அது ஒருபோதும் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
Published on
Summary

சல்மான் கான் நடிக்கும் 'Battle of Galwan' படத்தின் பெயர் 'Maatrubhumi' என மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் அபூர்வா லாக்கியா, இது திடீர் முடிவு அல்ல, படத்தின் மனிதநேயம் மற்றும் வீரர்களின் அமைதியான போராட்டங்களை பிரதிபலிக்கிறது என விளக்கினார். 'Maatrubhumi: May War Rest in Peace' என்ற தலைப்பு, படத்தின் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்துகிறது.

சல்மான் கான்
சல்மான் கான்pt web

சல்மான் கான் நடிப்பில் அபூர்வா லாக்கியா இயக்கி வரும் இந்தி படம் `Battle of Galwan'. நேற்று இப்படத்தின் பெயர் `Maatrubhumi' என மாற்றியுள்ளதாக அறிவித்தனர். மேலும் May war rest is peace என்ற டேக் லைனும் இணைக்கப்பட்டது. டிசம்பர் மாதம் இப்படத்தின் டீசர் `Battle of Galwan' வெளியானது. மேலும் இப்படத்தின் முதல் பாடலாக Maatrubhumi என்ற பாடல் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்போது அதே பெயரை படத்திற்கும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் எதற்காக இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது என்பதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார், இயக்குநர் அபூர்வா. அதுபற்றி அவர் விவரிக்கையில், "சல்மான் கான் சாரின் ரசிகர்களுக்குத் தலைப்பை மாற்றியது திடீரென நிகழ்ந்ததாகத் தோன்றலாம், ஆனால் அது ஒருபோதும் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. ஆரம்பத்திலிருந்தே, நாங்கள் 'Battle of Galwan' மற்றும் 'Maatrubhumi' என இரண்டு தலைப்புகளைப் பதிவு செய்திருந்தோம். எங்கள் திரைப்படத்தை உருவாக்கும் பயணத்தில், ​​இது ஒரு போரைப் பற்றியது மட்டுமல்ல என்பதை உணர்ந்தோம். அடிப்படையில், இந்தப் படம் மனிதநேயம், பிறர் உணர்வுகளை மதிப்பது மற்றும் நமது வீரர்கள் அமைதியாக நிகழ்த்திய போராட்டங்களைப் பற்றியது.

Why did Salman Khan's movie name changed says Apoorva Lakhia
"அந்த சூழல் வந்தால் பாடுவதையே நிறுத்திவிடுவேன்!" - அழுத்தமாக சொன்ன ஸ்ரேயா கோஷல் | Shreya Ghoshal

Maatrubhumi: May War Rest in Peace அந்த உணர்வையும் தியாகத்தையும் இது மிகவும் உண்மையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. மோதல்களுக்கு மத்தியிலும் மனிதநேயத்தைப் பாதுகாக்கும் கதையின் ஆன்மாவை இது பிரதிபலிக்கிறது. இந்தப் படத்தில் இதே பெயரில் ஒரு பாடலும் உள்ளது, மேலும் பார்வையாளர்களிடமிருந்து அது பெற்ற அன்பு, அந்தத் தலைப்பை இன்னும் பொருத்தமானதாக உணரவைத்தது" என்றார்.

Maatrubhumi, salman khan
Maatrubhumi, salman khan

2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா-சீனா மோதலை மையமாக வைத்து ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங்கின் 'India’s Most Fearless 3' புத்தகத்தின் பகுதிகளை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம். முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், அக்‌ஷய் குமார் நடித்த `பூத் பங்களா' படத்துடன் மோதலை தவிர்த்து சுதந்திர தினத்துக்கு வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது புது தலைப்புடன் வெளியாகியுள்ள போஸ்டரில் ரிலீஸ் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Why did Salman Khan's movie name changed says Apoorva Lakhia
விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அரசன்! | Arasan | Vetrimaaran | Simbu

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com