Manoj Bajpayee
Manoj BajpayeeThe Familyman

The Family Man 3வது சீசன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Manoj Bajpayee | Priyamani

இந்த சீசனை இன்னும் அதிக ஆக்‌ஷன், கவர்ச்சிகரமான கதை, இருக்கையின் நுனிக்கு வரும் அனுபவத்துடன் உயர்த்தினோம்.
Published on

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்ற சீரிஸ் `The Family Man'. ராஜ் & டிகே உருவாக்கிய இந்த சீரிஸில் இதுவரை வெளியான இரு சீசன்களும் பெரிய ஹிட். இப்போது மூன்றாவது சீசன் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளனர்.

ஒரு இரகசிய உளவாளியாக + ஒரு குடும்பஸ்தனாக என இரட்டை குதிரையில் செல்லலும் ஸ்ரீகாந்த் திவாரியாக நடித்துள்ள மனோஜ் பாஜ்பாய் இம்முறை என்ன சவால்களை எதிர்கொள்ள போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். ஜெய்தீப் அஹ்லாவத், நிம்ரத் கவுர், ஷரிப் ஹஷ்மி, பிரியாமணி, ஆஷ்லேஷா தாக்கூர், வேதாந்த் சின்ஹா, ஸ்ரேயா தன்வந்தரி மற்றும் குல் பனாக் போன்றோர் இந்த சீசனில் நடித்துள்ளனர். `The Family Man' சீசன் 3 நவம்பர் 21 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ், டி.கே, சுமன் குமார், சுமித் அரோரா ஆகியோரால் எழுதப்பட்டுள்ள இந்த சீசனை ராஜ் & டி.கே உடன் இணைந்து சுமன் குமார் மற்றும் துஷார் சேத் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த சீசன் பற்றி ராஜ் & டி.கே கூறுகையில் "பல ஆண்டுகளாக, தி ஃபேமிலி மேன் மீது பார்வையாளர்கள் பொழிந்த அன்பும் பாராட்டும் உண்மையிலேயே மிகப்பெரியது. இந்த சீசனை இன்னும் அதிக ஆக்‌ஷன், கவர்ச்சிகரமான கதை, இருக்கையின் நுனிக்கு வரும் அனுபவத்துடன் உயர்த்தினோம். இந்த சீசனில், வேட்டைக்காரன் வேட்டையாடப்படுபவனாக மாறுகிறான், ஏனெனில் ஸ்ரீகாந்த் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறான், ருக்மா வடிவத்தில். இது அவரையும் அவர் வாழ்க்கையையும் மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. பார்வையாளர்கள் புதிய சீசனை முந்தைய இரண்டு சீசன்களைப் போலவே மிகுந்த உற்சாகத்துடனும், அனுபவிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com