பாலிவுட் நடிகருடனான காதலை ஒப்புக்கொண்ட நடிகை தமன்னா?

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை நடிகை தமன்னா ஒரு பேட்டியின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார்.
Tamannaah
Tamannaah@Tamannaah Instagram

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நடிகை தமன்னா. தமிழில் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, அதன்பிறகு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தமிழில் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் தமன்னா.

Jailer Shooting wrap up
Jailer Shooting wrap up

தற்போது இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுந்தர்.சி-யின் அரண்மனை நான்காம் பாகத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த வருடம் ஹன்சிகாவைப் போன்று மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்ய தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதனை அவர் மறுத்திருந்தார். பின்னர், பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலிப்பதாக தொடர்ந்து பதிவுகள் பகிரப்பட்டு வந்தன. அவர்கள் இருவரும் சேர்ந்து அவ்வப்போது பொது இடங்களுக்கு செல்லும் புகைப்படங்களும் வைரலாகின. ஆனால், இதுகுறித்து தமன்னாவே மறுத்து விளக்கமும் அளித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ளப் பேட்டியில், விஜய் வர்மாவை காதலிப்பதை நடிகை தமன்னா உறுதிப்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது. அந்தப் பேட்டியில் தமன்னா, “நீங்கள் ஒருவருடன் சேர்ந்து நடிப்பதாலேயே அவர்கள்மீது காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை. நான் எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்று பிடித்து இருக்க வேண்டும். அவரிடம் எதையாவது உணர்ந்தால் அது நிச்சயம் தனிப்பட்டது.

நீங்கள் உங்களது பார்ட்னரை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், உடல் ரீதியாக நீங்கள் நகர வேண்டியிருக்கும் அல்லது அந்த நபரின் புரிதலுக்கு உதவும் பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், நான் எனக்காக ஒரு உலகத்தை உருவாக்கியது போல் இருந்தேன், நான் எதுவும் செய்யாமலேயே அந்த உலகத்தைப் புரிந்துகொண்ட ஒரு நபர் இங்கே இருக்கிறார். என்மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒரு நபர் அவர்” என்று தெரிவித்துள்ளார்.

Vijay Varma-Tamanna
Vijay Varma-Tamanna

உங்களுக்கும், விஜய் வர்மாவுக்கும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ படப்பிடிப்பில் தான் விஷயங்கள் (காதல் ஏற்பட்டதா) மாறியதாக என்று நெறியாளர் கேட்டதற்கு, அதற்கு அவர் ஆமாம் என்று தெரிவித்துள்ளார். தான் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நபர் அவர் தான் என்றும், அவர் தான் தன்னுடைய மகிழ்ச்சிக்கான இடம் என்றும் நடிகை தமன்னா, விஜய் வர்மா உடனனான காதல் பற்றி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com