\
Satluj removed from ott
Honey TrehanSatluj

திரையிட மறுப்பு.. ஓடிடியிலிருந்து நீக்கம்.. Satluj-க்கு வந்த தடைகள்! | Honey Trehan

மூன்று வருட இழுபறிக்குப் பிறகு, படக்குழுவினர் திரையரங்க வெளியீட்டை முற்றிலுமாக தவிர்த்து, எந்தவித வெட்டுகளும் இன்றி படத்தை நேரடியாக ஒரு ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப முடிவு செய்தனர்.
Published on

மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் `Satluj'. ஹனி ட்ரேஹான் இயக்கியுள்ள இப்படத்தில் தில்ஜித் தோசாஞ்ச் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் நேரடியாக ஜூலை 3ஆம் தேதி ஸி5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், திடீரென இந்தப் படத்தை ஸி5 நேற்று இரவு நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. முதலில் 'பஞ்சாப் 95' என்று பெயரிடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம், சான்றிதழ் கோரிய காலத்திலிருந்தே தடைகளைச் சந்தித்து வருகிறது. இது 2022-இல் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, அந்த வாரியம் 127 காட்சிகள் வரை நீக்கவும், தலைப்பை மாற்றவும் கோரியது. இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. மேலும் 2023-இல், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திட்டமிடப்பட்டிருந்தது முதல் திரையிடலில் இருந்தும் இந்தப் படம் திரும்பப் பெறப்பட்டது.

மூன்று வருட இழுபறிக்குப் பிறகு, படக்குழுவினர் திரையரங்க வெளியீட்டை முற்றிலுமாகத் தவிர்த்து, எந்தவித வெட்டுகளும் இன்றி படத்தை நேரடியாக ஒரு ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப முடிவு செய்தனர். தற்போது 'Satluj' எனப் பெயரிடப்பட்டு ZEE5-ல் வெளியானது. "நாங்கள் எப்போதும் விரும்பியபடியே அதன் அசல் வடிவத்தில்" ஒரு முழுமையான படம் என்று இயக்குநர் ட்ரெஹான் முன்னதாகக் கூறியிருந்தார். இப்படம் நீக்கப்பட்டது குறித்து பதிவிட்ட ஸி5 ஓடிடி தளம், " 'சட்லஜ்' (Satluj) வெளியானதிலிருந்து அதற்கு கிடைத்துள்ள வரவேற்பு உண்மையிலேயே மகத்தானது. இப்படத்திற்கு சந்தா செலுத்தி, அதைப் பார்த்து, அதற்கு ஆதரவளித்த ஒவ்வொரு பார்வையாளருக்கும் நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கும், இக்கதையை உயிர்ப்பித்த அனைவருக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தன.

Satluj removed from ott
38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் லிஸ்ஸியை இயக்கிய ப்ரியதர்ஷன்! | Priyadharshan | Lissy

ZEE5-ல், 'சட்லஜ்' திரைப்படத்திற்கும் அதன் பின்னணியில் உள்ள படைப்பாற்றல் சார்ந்த தொலைநோக்குப் பார்வைக்கும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். வலிமையான கதை சொல்லல் முறைக்கு மக்களை ஊக்கப்படுத்தவும், காலத்தைக் கடந்து நிலைத்திருக்கவும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவும் கூடிய ஆற்றல் உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். உண்மையான மற்றும் அர்த்தமுள்ள கதைக்களங்களை முன்னெடுப்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம். 

Honey Trehan
Honey TrehanSatluj

தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை 'சட்லஜ்' திரைப்படம் இந்தியாவில் கிடைக்காது. இப்படைப்பை மிக விரைவில் மீண்டும் எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்துச் சரியான வழிமுறைகளையும், உரிய நடைமுறைகளின்படி ஆராய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். படைப்பாளிகள் மீதும், ஆழ்ந்த ஈடுபாடு, கலை நேர்மை மற்றும் தெளிவான நோக்கத்துடன் சொல்லப்படும் கதைகள் மீதும் நாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு என்றும் மாறாதது" எனக் குறிப்பிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com