Santosh
SantoshSandhya Suri

CBFCல் நிறுத்தப்பட்ட `சந்தோஷ்' OTT யில் ரிலீஸ்! | Santosh | Sandhya Suri

கலவரத்தில் இறந்து போன தன் கணவனின் கான்ஸ்டபிள் பணியில் இணையும் சந்தோஷ் என்ற பெண், ஒரு தலித் இளம்பெண்ணின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையை விசாரிக்க நியமிக்கப்படும்போது என்னவெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் கதை.
Published on

சந்தியா சூரி இயக்கத்தில் ஷஹானா கோஸ்வாமி நடித்து உருவான இந்தி படம் `சந்தோஷ்'. இந்திய-பிரிட்டிஷ் தயாரிப்பாக உருவான இப்படம் 2024 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் Un Certain Regard பிரிவின் கீழ் திரையாகி, பரவலான பாராட்டுகளை பெற்றது. மேலும் 2025 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் லண்டனின் சார்பாக அனுப்பப்பட்டது.

கலவரத்தில் இறந்து போன தன் கணவனின் கான்ஸ்டபிள் பணியில் இணையும் சந்தோஷ் என்ற பெண், ஒரு தலித் இளம்பெண்ணின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையை விசாரிக்க நியமிக்கப்படும்போது என்னவெல்லாம் நடக்கிறது என்பதே படத்தின் கதை. இதனுள் சாதி, பாலினம், அதிகார மையம் மற்றும் அரசாங்கம் எனப் பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டிருந்தது.

திரைவிழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ஜனவரி 10-ம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு (CBFC) இப்படத்தின் மீது ஆட்சேபனைகளை தெரிவித்ததால் ரிலீஸ் நிறுத்தப்பட்டது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சாதி சார்ந்த விஷயங்கள், காவல்துறை சார்ந்த விஷயங்கள் போன்ற பல விஷயங்களை நீக்காமல், படத்தை திரையரங்கில் வெளியிட அனுமதிக்க முடியாது என கூறியது தணிக்கை குழு.

இந்தியாவில் இப்படத்திற்கு வெளியாகவில்லை என்றாலும், லண்டன் உட்பட மற்ற சில நாடுகளில் திரையரங்கிலும், ஓடிடியிலும் வெளியானது. இப்போது இந்தப் படம் இந்தியாவிலும் வெளியாக உள்ளது. திரையரங்கில் வெளியிட முடியாது என்பதால், இப்படம் Lionsgate Play ஓடிடி தளத்தில் அக்டோபர் 17ம் தேதி இந்தியாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com