Deepika Padukone, Ranveer Singh
Deepika Padukone, Ranveer SinghDua

கணவன்-மனைவினா இப்படி இருக்கணும்.. ரன்வீர்-தீபிகா செயலால் பாலிவுட்டில் பொறாமை!

தீபிகா - ரன்வீர் தம்பதி, பெற்றோர் ஆனா உடன் எடுத்த முதல் முடிவே ஒருவருக்கு வேலை இருக்கும் போது, இன்னொருவர் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பது தானாம்.
Published on
Summary

ரூ.1700 கோடிக்கும் மேல் வசூல் செய்த ‘துரந்தர் 2’ வெற்றிக்குப் பிறகும், புதிய பட ஒப்பந்தங்களையும், வெளி நிகழ்ச்சிகளையும் தற்காலிகமாக நிறுத்தி, மகள் துவாவை கவனிக்க வீட்டிலேயே தங்கி வருகிறார் ரன்வீர் சிங். இதே நேரத்தில், இரண்டாவது கர்ப்பத்துடனும் ஷாருக்கானின் ‘கிங்’ படத்துக்காக தென்னாப்பிரிக்காவில் ஷூட்டிங்கில் ஈடுபட்டுள்ள தீபிகா, தம்பதியரின் பரஸ்பர தொழில் ஆதரவை வெளிப்படுத்துகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் `துரந்தர் 2' படம் மூலம் உலகலெவல் ஹிட் கொடுத்தார். உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்தது. இந்நேரம் அடுத்த படத்துக்கு பல நூறு கோடி சம்பளம் வாங்கி அடுத்த பட ஷூட்டுக்கு கிளம்பி இருப்பாரே என பார்த்தால், இப்போது ரன்வீரால் வீட்டை விட்டு கிளம்ப முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.

deepika padukone hollywood walk of fame first indian actress
தீபிகா படுகோன்எக்ஸ் தளம்

அவரது மகள் துவா (Dua) தான் அதற்கு காரணம். ரன்வீரின் மனைவியும் துவாவின் தாயுமான நடிகை தீபிகா படுகோன், தற்போது குழந்தையை மும்பையில் விட்டுவிட்டு நடிகர் ஷாருக்கானுடன் `கிங்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வெளிநாடு சென்று இருக்கிறார். எனவே அவர் திரும்பி வரும் வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ரன்வீர் சிங்கிற்கு வந்துள்ளது.

Deepika Padukone, Ranveer Singh
உயரத்தை சரி செய்ய சொன்னதும் ரஜினி சார் செஞ்ச விஷயம்! - ராஜீவ் மேனன் | KH x RK | Nelson

எனவே புதிய படங்கள் ஒப்பந்தம் செய்யாமல், வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் இருந்து செய்ய முடிந்த வேலைகளை மட்டும் செய்து கொண்டு மகளை கவனித்து வருகிறார் ரன்வீர். தீபிகா - ரன்வீர் தம்பதி, பெற்றோர் ஆனா உடன் எடுத்த முதல் முடிவே ஒருவருக்கு வேலை இருக்கும் போது, இன்னொருவர் குழந்தையை கவனிக்க வேண்டும் என்பது தானாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொழிலில் ஆதரவாக இருப்பது குறித்து பாலிவுட்டில் பலரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Ranveer Singh
Ranveer Singh

தீபிகா படுகோன் கடந்த மாதம், தான் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்தார். இருந்தும் ஷாரூக்கின் பட ரிலீஸ் நெருங்குவதால், விரைவாக அப்படத்தை முடித்துக் கொடுக்க தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். `கிங்' படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் சில நாள்களுக்கு தீபிகா படுகோன் தென்னாப்பிரிக்காவில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தீபிகா ஷூட்டிலும், ரன்வீர் வீட்டிலும் பிஸி!

Deepika Padukone, Ranveer Singh
ஒரு வருடத்திற்கு மேலான தயாரிப்பு, 24 பிரம்மாண்ட செட்கள்! - `பெத்தி' குறித்து அவினாஷ் | Peddi
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com