Ranveer Singh | Johny Sins
Ranveer Singh | Johny SinsBoldcare

என்ன ரன்வீர் இதெல்லாம்... ஜானி சின்ஸுடன் இணைந்து நடித்த ரன்வீர்..!

ஏக்தா கபூரின் நாடக பாணியில் இந்த விளம்பரத்தை எடுத்திருக்கிறது Boldcare. இணையம் முழுக்க தற்போது இதுதான் பேசுபொருளாக இருக்கிறது.
Published on

அந்த வீடியோ முதலில் பார்த்த எல்லோருக்கும் தோன்றியது இதுதான். ஒன்று deepfake ஆக இருக்கக்கூடும். அல்லது ரன்வீர் சிங் போல், ஜானி சின்ஸ் போல் இருக்கும் நபர்களை வைத்து படமாக்கி இருக்கக்கூடும் என்பது தான் ஆனால், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தான் வித்தியாச வினோதங்களுக்கு பெயர் போனவர் ஆயிற்றே.

செலிப்ரிட்டிகள் விளம்பரங்களில் நடிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இப்போதெல்லாம், இன்ஸ்டாவில் குடும்பம் குடும்பமாக விளம்பரங்களில் நடித்துவருகிறார்கள். இதை நாம் விளம்பரம் செய்கிறோமே, இதனால் பின்விளைவுகள் வந்தால் நாம் தானே பொறுப்பு என்கிற எந்த குற்றவுணர்வும் இல்லாமல் தான் இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்கள் பல பொருட்களை விளம்பரம் செய்கிறார்கள். சரி, விஷயத்துக்கு வருவோம். ரன்வீர் ஒரு பாலியல் ஆரோக்கியம் குறித்த ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அதைவிடவும் ஷாக் ஆன விஷயம் அதில் அடல்ட் ஸ்டார் ஜானி சின்ஸும் இருப்பது தான். ஆம், இருவரும் இணைந்து boldcare நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஏக்தா கபூரின் நாடக பாணியில் இந்த விளம்பரத்தை எடுத்திருக்கிறது Boldcare. இணையம் முழுக்க தற்போது இதுதான் பேசுபொருளாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com