Martin Scorsese, Neeraj Ghaywan
Martin Scorsese, Neeraj GhaywanHomebound

பாராட்டிய Martin Scorsese, நன்றி சொன்ன நீரஜ் கெய்வான்! | Homebound | Neeraj Ghaywan

இந்த ஆண்டு அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் பட்டியலிடப்பட்ட HOMEBOUND திரைப்படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
Published on

நீரஜ் கய்வான் இயக்கத்தில் கரண் ஜோஹர் தயாரிப்பில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் நடித்திருந்த படம், 'ஹோம்பவுண்ட்'. இந்தப் படம் இந்தியாவின் சார்பாக சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. கடந்த டிசம்பர் 17ம் தேதி ஆஸ்கர் விருதுகளில் 12 பிரிவுகளுக்கான ஷார்ட் லிஸ்ட் வெளியிடப்பட்டது. அதில், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில், இடம்பிடித்திருந்த 15 படங்களில் 'ஹோம்பவுண்ட்' படமும் இடம்பிடித்தது. இதற்கு தற்போது வாழ்த்துக்களை கூறி இருக்கிறார் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மற்றும் 'ஹோம்பவுண்ட்' படத்தின் நிர்வாக தயாரிப்பாளருமான மார்ட்டின் ஸ்கார்சஸி.

இதற்கான பாராட்டை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்கார்சஸி "இந்த ஆண்டு அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் பட்டியலிடப்பட்ட HOMEBOUND திரைப்படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இரு மனிதர்களின் நட்பு, அடையாளத்திற்காக அவர்களது தேடல், கருணை, மனித பிணைப்பு போன்றவரை பேசிய இந்த உண்மைக்கதை என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும், எனது தோழி மற்றும் இணை தயாரிப்பாளரான Melita Toscan Du Plantierக்கும் எனது வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Martin Scorsese, Neeraj Ghaywan
"எனக்கும் ரஹ்மான் சாருக்கும் சின்னதா சண்டை..." - மூன்வாக் சீக்ரெட் சொன்ன பிரபுதேவா | Moonwalk

அந்தப் பதிவில் நன்றி தெரிவித்து கமெண்ட் செய்த இயக்குநர் நீரஜ் கெய்வான் "ஐயா, உங்கள் கனிவுக்கும், தாராள மனப்பான்மைக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எழுத்து மற்றும் எடிட்டிங்கின் போது கிடைத்த உங்கள் பங்களிப்பு விலைமதிப்பற்றது. மேலும் அதுவே இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள பலரால் விரும்பப்படும் வகையில் வடிவமைத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com