\
I'm Not Comfortable with Bikini says Kajal Aggarwal
Kajal AggarwalThe India Story

”பிகினி அணிந்து நடிப்பதில் உடன்பாடு இல்லை!” - காஜல் அகர்வால் | Kajal Aggarwal

மிகவும் நெருக்கமான காட்சிகளை நடிப்பதிலும் எனக்கு விருப்பம் இல்லை. அங்குதான் எனக்கு எல்லைகள் வகுத்துக் கொள்கிறேன்.
Published on

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ விரைவில் வெளியாகவுள்ளது. கூடவே நிதிஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 111ஆவது படத்திலும் நடித்து வருகிறார். ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பல பேட்டிகளை அளித்து வருகிறார்.

அப்படியான பேட்டி ஒன்றில், "நான் எந்தவொரு திரைப்படத்திலும் இதுவரை பிகினி காட்சிகளில் நடித்ததில்லை. எனக்கு பிகினி உடை அணிந்து நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது முற்றிலும் எனது தனிப்பட்ட விஷயம் என்று நம்புகிறேன். அதுபோன்ற தோற்றத்தில் திரையில் தோன்றுவதில் எனக்கு துளியளவும் விருப்பமில்லை. மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதிலும் எனக்கு விருப்பமில்லை. அங்குதான் எனக்கு எல்லைகள் வகுத்துக் கொள்கிறேன். எனக்கென எல்லைகள் உண்டு. அதற்கு மதிப்பளித்து உண்மையாக இருக்க விரும்புகிறேன். நமக்கு நாம் உண்மையாக இருப்பதே முக்கியம். எனக்கு சௌகர்யமாக இல்லாத காட்சிகள் இருக்கும் பல திரைப்படங்களை நான் நிராகரித்தும் இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும், எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எனக்கு கவலை இல்லை" என்று பேசியிருக்கிறார்.

I'm Not Comfortable with Bikini says Kajal Aggarwal
'பொட்டு வைத்த வட்ட நிலா'வுக்கு குடும்பமே எமோஷனல் ஆகிடுச்சு! - அதர்வா | Atharva | Idhayam Murali
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com