Hesham Abdul Wahab
Hesham Abdul WahabBollywood

பாலிவுட்டில் அறிமுகமாகும் ஹேஷம் அப்துல் வஹாப்! | Hesham Abdul Wahab | Do Deewane Seher Mein

சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த `மாமன்' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். மேலும் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கிய `ஒன்ஸ் மோர்' படத்திலும் இவர் பாடல்கள் பெரிய வரவேற்பு பெற்றது.
Published on

மலையாள சினிமாவில் `Salt Mango Tree' மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹேஷம் அப்துல் வஹாப். தொடர்ந்து பல மலையாளப்படங்களுக்கு இசையமைத்தவர், வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடித்த `Hridayam' படத்தின் மூலம் மிகப் பிரபலமானார்.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த `குஷி' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்பு `ஹாய் நானா', `கேர்ள்ஃப்ரெண்ட்' போன்ற படங்கள் மூலம் கவனிக்க வைத்தார். சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த `மாமன்' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். மேலும் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கிய `ஒன்ஸ் மோர்' படத்திலும் இவர் பாடல்கள் பெரிய வரவேற்பு பெற்றது. மூன்று மொழிகளிலும் தனது அற்புதமான பாடல்களால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர், இப்போது பாலிவுட்டில் களம் இறங்குகிறார்.

Hesham Abdul Wahab
ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு.. தேதி அறிவிப்பு! | Jana Nayagan | Vijay | Censor

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் ரவி உத்யாவர் இயக்கத்தில் சித்தாந்த் சதுர்வேதி, மிருணாள் தாக்கூர் நடித்துள்ள படம் `தோ திவானே ஷெகர் மெய்ன்' (Do Deewane Sheher Mein). இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஹேஷம் அப்துல் வஹாப். இப்படத்தில் சச்சின் - ஜிகர் (Sachin–Jigar ), ஸ்ரேயாஸ் புராணிக் (Shreyas Puranik) மற்றும் அனுரங் சாய்க்கியா (Anurag Saikia) ஆகியோருடன் இணைந்து இசையமைத்துள்ளார் ஹேஷம். ஹேஷம் இசையமைத்த பாடலை ஜூபின் நௌடியல் மற்றும் நீதி மோகன் பாடியுள்ளனர். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

இது போக தெலுங்கில் ஆதித்யா ஹாசன் இயக்கும் படம்,  ஹாய் நானா இயக்குநர் சௌர்யுவ்வின் அடுத்த  படம், `ஹிட்' படத்தின் இயக்குநர் சைலேஷ் கோலனு ஆகியோரின் படங்கள், தமிழில் அர்ஜூன் தாஸ் நடித்துவரும் `சூப்பர்ஹீரோ', பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் `மேட் இன் கொரியா' படங்களிலும் பணியாற்றி வருகிறார். கூடவே கோல்டன் ஸ்டார் கணேஷ் நடிப்பில் உருவாகும் படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com