Dharmendra
DharmendraDischarged

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்! | Dharmendra | Sunny Deol

சில ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட கடும் சலசலப்பு உண்டானது. அது முற்றிலும் தவறான தகவல், அவர் சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருகிறார், உடல்நிலை சீராகி வருகிறது என தர்மேந்திராவின் மனைவி ஹேமமாலினி மற்றும் மகள் ஈஷா தியோல் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.
Published on

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89). 60களில் இருந்து 90கள் வரை கொடிகட்டி பறந்தவர், தற்போது வரை சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்து முடித்த `இக்கிஸ்' டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. நடிகர் தர்மேந்திராவுக்கு இரு தினங்கள் முன்பு (நவம்பர் 10) திடீரென சுவாசக் கோளாறு காரணமாக மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மும்பையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை தர்மேந்திரா இறந்துவிட்டதாக சில ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட கடும் சலசலப்பு உண்டானது. அது முற்றிலும் தவறான தகவல், அவர் சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருகிறார், உடல்நிலை சீராகி வருகிறது என தர்மேந்திராவின் மனைவி ஹேமமாலினி மற்றும் மகள் ஈஷா தியோல் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். இதனிடையே இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Sunny Deol
Sunny Deol

"தர்மேந்திரா இன்று காலை 7.30 மணிக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வார்" என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சாம்தானி தெரிவித்தார். மேலும் தர்மேந்திரா மூத்தமகன் சன்னி தியோல் வீட்டில் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

Dharmendra
நடிகர் தர்மேந்திரா உடல்நிலை குறித்து வதந்தி.. மனைவி ஹேமமாலினி மறுப்பு!

இது குறித்து தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல் தரப்பு கூறுகையில் "தர்மேந்திராவின் உடல்நிலை சீராக உள்ளது மேலும் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும் போது பகிரப்படும். தயவுசெய்து அவரது உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வும், குடும்பத்தின் தனியுரிமையை மதிக்கவும் அனைவரும் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com