Dhanush
DhanushTere Ishk Mein

3 நாட்களில் 50 கோடி... டாப் 10 பட்டியலில் இடம்பெறுமா தனுஷ் படம்? | Tere Ishk Mein | Dhanush

`தேரே இஷக் மே' படத்தின் முதல் நாள் வசூல் இந்தியில் மட்டும் 15.06 கோடி என தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார். படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தியில் மட்டும் 50.95 கோடி வசூல் என இன்று அறிவித்திருக்கிறார் தனுஷ்.
Published on

தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி நவம்பர் 28ல் வெளியான படம் `தேரே இஷக் மே'. இப்படம் இப்போது வசூலில் முன்னணி நிலையை அடைந்து வருகிறது. பாலிவுட் சினிமா கடந்த சில வருடங்களாக ரசிகர்களை கவர்வதில் பல முயற்சிகள் செய்தும் முடியாமல் திணறியது. அது இப்போது மெல்ல மெல்ல சரியாகி வருகிறது என்றே சொல்லலாம். அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் சில படங்கள் நல்ல வசூலை செய்துள்ளன. அந்த பட்டியலில் விரைவில் `தேரே இஷக் மே' இணையும் என சொல்லப்படுகிறது.

`தேரே இஷக் மே' படத்தின் முதல் நாள் வசூல் இந்தியில் மட்டும் 15.06 கோடி என தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்திய அளவில் இதன் வசூல் கிட்டத்தட்ட 16 கோடி என சொல்லப்படுகிறது. படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தியில் மட்டும் 50.95 கோடி வசூல் என இன்று அறிவித்திருக்கிறார் தனுஷ். இந்திய அளவில் இந்த வசூல் 53 கோடி இருக்கும்என சொல்லப்படுகிறது. 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தின் வசூல் விரைவில் லாபத்தை நோக்கி செல்ல இருக்கிறது எனவும் கணிக்கிறார்கள் திரையுலகினர்.

Dhanush
"சம்பளத்தையே வாங்க மாட்டாங்க..." தெலுங்கு ஹீரோக்களை புகழும் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் | Ravi Shankar

இந்தாண்டு வெளியான இந்திப் படங்களில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த பத்து படங்களில் 10வது இடத்தில் Jolly LLB 3 -  171.64 கோடி, 9வது இடத்தில் Thamma - 187.58 கோடி, 8வது இடத்தில் Sitaare Zameen Par - 267.52 கோடி, 7வது இடத்தில் Raid 2 - 237.46 கோடி, 6வது இடத்தில் War 2 - 364.35 கோடி, 5வது இடத்தில் Housefull 5 - 288.67 கோடி, 4வது இடத்தில் Mahavatar Narsimha - 326.82 கோடி, 3வது இடத்தில் Kantara: A Legend Chapter-1 - 852 கோடி, 2வது இடத்தில் Saiyaara - 570.33 கோடி, முதல் இடத்தில் Chhaava - 807.91 கோடி என வசூல் செய்திருக்கிறது. `தேரே இஷக் மே' படத்தின் வசூலை பார்க்கையில் கண்டிப்பாக இந்தப் பட்டியலில் விரைவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com