10 வருடங்களை நிறைவுசெய்த ‘ராஞ்சனா’ - 3வது முறையாக பாலிவுட் இயக்குநருடன் கைக்கோர்க்கும் தனுஷ்

கடந்த 2021-ம் ஆண்டு, ஆனந்த் எல் ராய் - தனுஷ்- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ‘அட்ராங்கி ரே’ படத்திற்கு இணைந்திருந்தனர்.
Dhanush's Tere Ishq Mein
Dhanush's Tere Ishq Mein YouTube/Colour Yellow Production

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ராஞ்சனா’ (Raanjhanaa). இந்தப் படத்தின் மூலம் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். படத்தில் அவருடன் சோனம் கபூர், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த் எல் ராயுடன், தனுஷ் மூன்றாவது முறையாக கைக்கோர்த்துள்ளார். ‘ராஞ்சனா’ படத்திற்கு அடுத்து கடந்த 2021-ம் ஆண்டு, ஆனந்த் எல் ராய் - தனுஷ்- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ‘அட்ராங்கி ரே’ படத்திற்கு இணைந்திருந்தனர்.

தற்போது இணையவுள்ள புதிய படம்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷே வெளியிட்டுள்ளார். 'Tere Ishq Mein' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்திற்கு ப்ரோமோ வீடியோவும் வெளியிட்டுள்ளனர்.

தற்போது நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com