
சத்யஜித் ரே எழுதிய `Golpo Boliye Tarini Khuro' என்ற சிறுகதையின் சினிமா வடிவமே `The Storyteller'. தொழிலதிபர் ஒருவருக்கு கதை சொல்லியாக மாற பணிக்கப்படுகிறார் எழுத்தாளர் தாரிணி. இந்த இருவருக்கு இடையே நிகழும் விஷயங்களே கதை.
நடிகர் பொம்மன் இராணி இயக்குநராக அறிமுகமான படம் `The Mehta Boys'. ஒரு தந்தைக்கும் மகனுக்குமான பாசத்தை பற்றி பேசிய அழகான படம்.
சினிமா மேல் ஆர்வம் கொண்ட சில இளைஞர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து உருவான படம் `Superboys of Malegaon'. சினிமாவை பற்றிய மிக நெகிழ்ச்சியான படமாக வரவேற்பை பெற்றது.
குழந்தை கடத்தலை மையாக வைத்து உருவான த்ரில்லர் படம் `Stolen'. மிக அழுத்தமான விஷயங்களை பேசியது.
Intellectually challenged குழு ஒன்றை கூடைப்பந்து போட்டிக்கு தயார் செய்யும் ஒரு பயிற்சியாளரின் கதையே `Sitaare Zameen Par'. அழகான உணர்வுப்பூர்வமான படமாக கவர்ந்தது.
இந்தாண்டின் மாபெரும் ஹிட் படங்களில் ஒன்று `Saiyaara'. இசைக் கலைஞருக்கும், கவிதை எழுதும் பெண்ணுக்கும் இடையேயான காதலே கதை. மோஹித் சூரி ஸ்டைலில் வந்த ஒரு தரமான மியூசிகல் படம்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இரு பாகங்களாக வந்த படம் `Nishaanchi'. ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைக்கும் ஒருவனை, அக்குடும்ப நபர் பழிவாங்குவதே கதை. சிறப்பான அனுபவம் தரும் வன்முறை படம்.
இரு நண்பர்களின் கதை வழியாக சமூகத்தின் சிக்கல்களை பற்றி முன்வைத்த படம் `Homebound'. அழுத்தமான படமாக கவனம் ஈர்த்தது.
கவிதைகள் கற்றுக்கொள்ள செல்லும் இடத்தில் காதலை கற்றுக் கொள்ளும் ஒருவனின் கதையே `Gustaakh Ishq'. கவித்துவமான படமாக வரவேற்பை பெற்றது.
இந்திய அளவில் இந்தாண்டின் மிகப்பெரிய ஹிட் படம் `Dhurandhar'. பாகிஸ்தான் தீவிரவாத திட்டங்களை முறியடிக்க செல்லும் ஒரு உளவாளியின் கதை. ஆக்ஷன் படமாக பெரிய வரவேற்பை பெற்றது.