Amitabh Bachchan
Amitabh Bachchan Instagram

‘Thank you for the ride buddy’- முன்பின் தெரியாதவரின் பைக்கில் நடிகர் அமிதாப் பச்சன் ஜாலி ரைட்!

முன்பின் தெரியாத ஒரு நபரின் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.
Published on

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன், மிக எளிமையான மனிதர் என பெயரெடுத்தவர். திரையைக் காட்டிலும் நிஜத்தில் வெளிப்படையாகப் பேசும் அமிதாப் பச்சன், ரசிகர்களை அடிக்கடி சந்திப்பது, அவர்களுடன் எளிமையாக பழகுவது, தன்னுடைய உடல்நிலை குறித்து அவ்வபோது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வது என ரசிகர்களுடன் எப்போதும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். இதற்காகவே பாலிவுட்டில் பெருமளவில் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறார் 80 வயதான அமிதாப் பச்சன்.

Amitabh Bachchan
Amitabh BachchanFacebook

இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது வேலைநிமித்தமாக முன்பின் தெரியாத ஒரு நபரின் இருசக்கர வாகனத்தில் சாகவாசமாக பயணம் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அப்படத்துடன், ''பைக்கில் என்னை அழைத்துவந்து விட்டதற்காக நன்றி நண்பரே. உங்களை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் என்னை பணிபுரியும் இடத்திற்கு சீக்கிரமாகவும் போக்குவரத்து நெரிசலில் இருந்து காப்பாற்றியும் அழைத்துச் சென்றீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ் மற்றும் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த அந்த ஓனருக்கு நன்றி'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அமிதாப் பச்சன்.

அமிதாப் பச்சன் தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'புராஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். மேலும் ரிபு தாஸ்குப்தாவின் இயக்கத்தில் 'செக்ஷன் 84' என்ற படத்திலும் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com