53வது சர்வதேச எம்மி விருதுகளில் இந்திய படம்! | 53rd International Emmy Awards | Imtiaz Ali
இம்தியாஸ் அலி இயக்கத்தில் தில்ஜித் தோசன்ஜ் நடித்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 2024ல் வெளியான இந்தி படம் `அமர் சிங் சம்கீலா'. இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பஞ்சாபி இசைக்கலைஞர் அமர் சிங் சம்கீலாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.
இப்படம் சர்வதேச எம்மி விருதுகளில் இரு பிரிவுகளில் போட்டியிடவுள்ளது. தொலைக்காட்சி துறையில் வெளியாகும் பல்வேறு படைப்புகளுக்கான விருதளிக்கும் `Emmy Awards'ன் ஒரு பிரிவாக நிகழும் விருது விழாவே இந்த International Emmy Awards. 53வது சர்வதேச எம்மி விருது விழாவாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 26க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு படங்கள், சீரிஸ் பல பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. இதில் Best Performance என்ற பிரிவில் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் Best TV Movie/Mini-Series என்ற பிரிவில் `அமர் சிங் சம்கீலா' படமும் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இவ்விழா நவம்பர் 24ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்த விருதுகளில் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்த நடிகர் தில்ஜித் தோசன்ஜ் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு படக்குழுவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.