\
ஐடி ரெய்டு பரபரப்பு... டாப்ஸி உடன் இருக்கும் படத்தை பகிர்ந்த அனுராக் காஷ்யப்!

ஐடி ரெய்டு பரபரப்பு... டாப்ஸி உடன் இருக்கும் படத்தை பகிர்ந்த அனுராக் காஷ்யப்!

ஐடி ரெய்டு பரபரப்பு... டாப்ஸி உடன் இருக்கும் படத்தை பகிர்ந்த அனுராக் காஷ்யப்!
Published on

பாலிவுட் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அண்மையில் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் காட்டப்படாத பணமோசடி நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டதாக வருமானவரி்த் துறை குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், இந்த சோதனை முடிந்த சூழலில் நடிகை டாப்ஸியுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார் அனுராக் காஷ்யப். அதில் தனது பட வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் அனுராக். 

அதில் அன்புடன் எங்களை வெறுப்பவர்கள் அனைவர்களுக்கும் என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே ரெய்டு நடந்து கொண்டிருந்த தருணத்தில் தன்னுடைய வீட்டின் நூலக அலமாரியுடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார். அதுவும் அப்போது வைரல் ஆனது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com