\
வோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா

வோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா

வோடாஃபோனை வறுத்தெடுத்த சோனாக்‌ஷி சின்ஹா
Published on

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, தனது ட்விட்டரில் வோடாஃபோன் நெட்வோர்க் தொடர்பாக ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “தொலைபேசி அழைப்புகள் செல்லவில்லை. குறுஞ்செய்திகள் செல்லவில்லை. இணைய சேவை வரவில்லை. கூகுள் மேப் எனக்கு வழி சொல்லவில்லை. நான் எப்போது வீட்டிற்கு போவது. உங்களது புதிய ‘ஏர்ப்ளேன் மோட்’ எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இந்த ட்விட் சென்று சேர்ந்தாலாவது எனக்கு சற்று நன்றாக இருக்கும்” என்று கிண்டல் செய்யும் வகையில் சாடியுள்ளார். இவர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com