\
ரூ.200 கோடி மோசடி வழக்கு: மஸ்கட் செல்ல முயன்ற நடிகை ஜாக்குலின் தடுத்து நிறுத்தம்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: மஸ்கட் செல்ல முயன்ற நடிகை ஜாக்குலின் தடுத்து நிறுத்தம்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: மஸ்கட் செல்ல முயன்ற நடிகை ஜாக்குலின் தடுத்து நிறுத்தம்
Published on
200 கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக ஏற்கெனவே ஜாக்குலினுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சென்றிருந்தார். அங்கு அவரை அமலாக்கத் துறையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவரை டெல்லி அழைத்துச் சென்று அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது. சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே பணப் பரிவர்த்தணை நடந்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com