\
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சஞ்சய் தத்

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சஞ்சய் தத்

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சஞ்சய் தத்
Published on

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படவே ஆகஸ்ட் 8ஆம் தேதி லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆக்ஸிஜன் அளவுக் குறைந்ததால் அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால் சோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்தது. இதுகுறித்து, தான் நன்றாக இருப்பதாகவும், கொரோனா நெகட்டிவ் என வந்ததால் இப்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனிப்பின்கீழ் ஓரிரு நாட்கள் வீட்டில் இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள மகேஷ் பட்டின் ‘சதக் 2’ படத்திற்காக காத்திருக்கிறேன். மேலும் ’கே.ஜி.எஃப் - 2’ குறித்து மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் என்றும் சஞ்சய் தத் கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com