பாலிவுட் சினிமா நடிகர் ரன்தீப் ஹூடா, புலி ஒன்று காட்டெருமையை விரட்டும் காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘நான் கேட்ச் செய்த முதல் புலி வேட்டை’ என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பக காட்டுப்பகுதியில் இதனை அவர் படம் பிடித்துள்ளதாக தெரிகிறது. பன்முக திறன் கொண்ட ரன்தீப், வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
அவரது வீடியோவுக்கு பலரும் லைக்குகளை கொடுத்து வரும் சூழலில் ரசிகர் ஒருவர், ‘அந்த சமயத்தில் உங்களது இதயத் துடிப்பின் வேகம் என்ன?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.