நடிகை இஷா கோபிகருக்கு பாஜகவில் என்ன பொறுப்பு?

நடிகை இஷா கோபிகருக்கு பாஜகவில் என்ன பொறுப்பு?

நடிகை இஷா கோபிகருக்கு பாஜகவில் என்ன பொறுப்பு?
Published on

பாஜகவில் சேர்ந்துள்ள நடிகை இஷா கோபிகர், அந்த கட்சியின் போக்குவரத்துத் துறை மகளிர் பிரிவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழில், அகத்தியன் இயக்கிய காதல் கவிதை, அரவிந்த் சாமி நடித்த, என் சுவாசக் காற்றே,  விஜயகாந்தின் 'நரசிம்மா', விஜய்-யின் நெஞ்சினிலே உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை இஷா கோபிகர். தெலுங்கு, இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். 

மும்பையில் நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது, அவரது முன்னிலையில் நடிகை இஷா கோபிகர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். அவர், பாஜக போக்குவரத்துத்துறை மகளிர் பிரிவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com