இந்தி நடிகர் இந்தர் குமார் மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த, வான்டட், அக்னிபாத், ஆர்யன், பேயிங் கெஸ்ட் உட்பட ஏராளமான இந்தி படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் இந்தர்குமார். இப்போது, ’படி பெய்டு ஹே யார்’ என்ற படத்தில் நடித்து வந்தார். மும்பை அந்தேரியில் வசித்து வந்த இவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் இறந்தார். சல்மான்கானுக்கு நெருக்கமான இவர் திடீரென இறந்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை மும்பையில் நடக்கிறது.