பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தூக்கிட்டு தற்கொலை!

பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தூக்கிட்டு தற்கொலை!

பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தூக்கிட்டு தற்கொலை!
Published on

பாலிவுட்டின் பிரபல குணசித்திர நடிகர் ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ஆசிப் பாஸ்ரா. இவர் தமிழில் கூட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் உள்ள ஓய்வு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழில் சூர்யா நடித்த "அஞ்சான்" திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஆசிப் பாஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஆசிப் பாஸ்ரா "வோ" திரைப்படத்தில் முதலில் நடித்தார். பின்பு "பிளாக் பிரைடே", "பர்சானியா", "ஜப் வி மெட்", "லம்ஹா", "கை போ சே", போன்ற புகழ்மிக்க திரைப்படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவர் நடித்த "பாதல் லோக்" எனும் வெப்சீரிஸ் அவருக்கு பெரும் புகழை தந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com