\
பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி மரணம்
Published on

பிரபல பாலிவுட் நடிகர் ஓம்புரி (66) இன்று காலை மாரடைப்பால் காலாமானார்.

பாலிவுட் படங்களில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர் ஓம்புரி.
புனேவில் உள்ள ஃபிலிம் & டெலிவிஷன் இன்ஸ்டியூட்டில் படித்தவர்.

தமிழில் கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ படத்திலும் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகரான ஓம்புரி பத்மஶ்ரீ விருது பெற்றவர். அதுமட்டுமின்றி, 1982 ஆம் ஆண்டு ‘ஆரோஹன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

ஓம்புரி மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் திரைக்கலைஞர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com