\
யு சான்றிதழ் கிடைத்தது.. எப்போது திரைக்கு வருகிறார் போகன்?

யு சான்றிதழ் கிடைத்தது.. எப்போது திரைக்கு வருகிறார் போகன்?

யு சான்றிதழ் கிடைத்தது.. எப்போது திரைக்கு வருகிறார் போகன்?
Published on

ஜெயம் ரவி-அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாக இருக்கும் போகன் திரைப்படம் சென்சார் குழுவிற்கு அனுப்பப்பட்டு ‘யு’ பெற்றுள்ளது. இம்மாதம் 26 அல்லது பிப்ரவரி 10ல் போகன் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘போகன்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபு தேவா தனது தயாரிப்பு நிறுவனமான பிரபு தேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் அனைத்தும் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படம் இன்று சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததையடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.இப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அல்லது பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்ஷ்மன்-ஜெயம் ரவி- டி.இமான் ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்த ரோமியோ ஜூலியட் படம் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அதே கூட்டணியில் வெளி வரும் போகன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com