டேராடுனில் ரஜினியுடன் நடிகர் பாபி சிம்ஹா: வைரல் போட்டோ
ரஜினியுடன் பாபி சிம்ஹா தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ரஜினி திரைப்படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங், மற்றும் டேராடுன் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ‘காலா’ ரிலீஸ் தேதிக்கு முதல் நாள் ரஜினி இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக டார்ஜிலிங் சென்றார். இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். மேலும் அவரது நண்பரான பாபி சிம்ஹாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
இதற்கான காட்சிகள் டார்ஜிலிங் மற்றும் டேராடுன் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. சிம்ஹா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ரஜினியுடன் அப்போது புகைப்படம் எடுத்து கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேகா ஆகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

