ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரி-விக்ரம் கூட்டணியில் கடந்த 2003ல் வெளியாகி ஹிட்டடித்த படம், சாமி. நேர்மையான போலீஸ் அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு திருநெல்வேலி பின்னணியில் எடுக்கப்பட்ட அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் 2ம் பாகம் இப்போது உருவாகிறது. இருமுகன், புலி படங்களைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். ஹரி இயக்குகிறார். விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந் நிலையில், சாமி-2 படத்தில் வில்லனாக நடிக்க, பாபி சிம்ஹாவை படக்குழுவினர் அணுகியுள்ளனர். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள பாபி சிம்ஹா, படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார். சாமி 2 படத்தின் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.