ப்ளூவேல் கேம் சேலஞ்சை மிஞ்சிய ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்!

ப்ளூவேல் கேம் சேலஞ்சை மிஞ்சிய ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்!

ப்ளூவேல் கேம் சேலஞ்சை மிஞ்சிய ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச்!
Published on

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய கேரள கல்லூரி மாணவிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வருகிறது. 


மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளிபாடிண்டே புஸ்தகம் படம் வெளியானது. இந்தப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யூடிப்பில் பதிவிட்டால் பரிசு வழங்கப்படும் என படக்குழுவினர் விளம்பரம் செய்திருந்தனர். இந்த சேலஞ்சை ஏற்று பலரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு   நடனமாடி யூடியூப்பில் அப்லோட் செய்திருந்தனர். இந்நிலையில் ஓணம் பண்டிகையன்று ஐஎஸ்சி கல்லூரி மாணவிகள் இணைந்து அப்பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை 31 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 


இந்த பாடலில் முதல் வரிசையில் நடனமாடும் ஷெர்லிக்கு தமிழகத்தில் பெரிய இணைய ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது. மலர் டீச்சருக்கு அடுத்து தமிழகத்தில் பெரிய ரசிகர்களை அவருக்கு உருவாக்கிவிட்டது. தமிழக இளைஞர்கள் பலரும் அப்பெண்களின் நடனத்தை புகழ்ந்து மீம்ஸ்களை உருவாக்கி ஷெர்லியை கொண்டாடிவருகின்றனர். ப்ளூவேல் கேம் சேலஞ்ச் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில் ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச் ஷெர்லிக்கு ஆச்சர்ய ஆனந்தத்தை அளித்துள்ளது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com