‘வா..எதிரில்..வா’ அசுரன் லிரிக்கல் வீடியோ 

‘வா..எதிரில்..வா’ அசுரன் லிரிக்கல் வீடியோ 
‘வா..எதிரில்..வா’ அசுரன் லிரிக்கல் வீடியோ 

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள அசுரன் படத்தின் ‘வா.. எழுந்து.. வா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிய ‘பொல்லாதவன்’,‘ஆடுகளம்’,‘வடசென்னை’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘அசுரன்’. 

இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி, பவன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிராகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

‘அசுரன்’ படத்திலுள்ள இரண்டு பாடல்கள் முதலில் வெளியானது. பின்னர், ‘எம் மினிக்கி’ என்ற காதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்று ‘வா.. எதிரில்.. வா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே, ட்ரெய்லர் வெளியான போதே இந்தப் பாடலின் வரிகள் ஆக்ரோஷமான இசையில் சில நொடிகள் வந்து சென்றது. அதனால், இந்தப் பாடல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்களிடையே நிலவியது. இந்த நிலையில், லிரிக்கல் வீடியோவை ரத்தம் தெறிக்க தெறிக்க படக்குழு உருவாக்கியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதி பாடியுள்ளார். “வா எதிரில் வா எதிர் படும் நொடியில் தடைகள் சிதற.. வா விரட்டி வா விரட்டிடும் விரட்டில் பகைகள் கதற”, “எதுக்கு மண்ணில் பொறக்குறோம் வெறுப்ப ஊட்ட தவிக்கிறோம் மனுஷ பயலின் அரக்க மனசில் உறக்கம் கெட்டு கொதிக்கிறோம்”  என பாடலின் வரிகள் மிகவும் உக்கிரமாக இருக்கின்றன. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com