\
இயக்குநர் லிங்குசாமி படப்பிடிப்பில் பிறந்தநாளைக் கொண்டாடிய பாரதிராஜா

இயக்குநர் லிங்குசாமி படப்பிடிப்பில் பிறந்தநாளைக் கொண்டாடிய பாரதிராஜா

இயக்குநர் லிங்குசாமி படப்பிடிப்பில் பிறந்தநாளைக் கொண்டாடிய பாரதிராஜா
Published on

இயக்குநர் லிங்குசாமி படப்பிடிப்பில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

’இயக்குநர் இமயம்’ என்று கொண்டாடப்படும் இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 78-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் சில ஆண்டுகளாக உறுதுணை கதாப்பாத்திரங்களிலும் நடித்து வரும் பாரதிராஜா தற்போது லிங்குசாமியின் ‘ராம்பொத்தேனி 19’ படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் முதல் வாரத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஷூட்டிங்கில் இருந்தபடியே பாரதிராஜா தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். லிங்குசாமி, ராம் பொத்தேனி, நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் பாரதிராஜாவுக்கு வாழ்த்துகளைக் கூறி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com