\
நடிகை பிபாஷா பாசு மருத்துவமனையில் அனுமதி!

நடிகை பிபாஷா பாசு மருத்துவமனையில் அனுமதி!

நடிகை பிபாஷா பாசு மருத்துவமனையில் அனுமதி!
Published on: 

இந்தி நடிகை பிபாஷ பாசு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு. இவர் தமிழில் ’சச்சின்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். உடலை ஃபிட்டாக வைத்திருப்பது பற்றி வீடியோ வெளியிட்டுள்ள பிபாஷா யோகாவையும் முன்னிலைப்படுத்துபவர். இந்நிலையில்  கடந்த சில நாட்களாக இவருக்கு சுவாசப்பிரச்னை என்று கூறப்படுகிறது. இதற்காக தினமும் மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். 

இந்நிலையில் நேற்று திடீரென்று அங்கு அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு என்ன பிரச்னை என்பதை அவரது உறவினர்கள் தெளிவாக  தெரிவிக்காத நிலையில், சுவாசப் பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com