\
"கர்ப்பம் குறித்த வதந்திகளை கேட்கும்போது வெறுப்பாக இருக்கும்”-நடிகை பிபாஷா பாஷு

"கர்ப்பம் குறித்த வதந்திகளை கேட்கும்போது வெறுப்பாக இருக்கும்”-நடிகை பிபாஷா பாஷு

"கர்ப்பம் குறித்த வதந்திகளை கேட்கும்போது வெறுப்பாக இருக்கும்”-நடிகை பிபாஷா பாஷு
Published on: 

எனது எடை உயரும் போதெல்லாம், நான் கர்ப்பமடைந்ததாக வந்த வதந்திகள் என்னை வெறுப்படையச் செய்ததாக பாலிவுட் நடிகர் பிபாஷா பாஷு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை  பிபாஷா பாஷுவும், பிரபல மாடலான கரண் சிங் குரோவர் ஆகிய இருவரும் நான்கு வருடங்களாக, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனிடையே பிபாஷா பாஷு கர்ப்பமடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து பிங் வில்லா யூடியூப் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் பிபாஷா பாஷு பேசும்போது “ எனது எடை உயரும் போதெல்லாம் நான் கர்ப்பம் தரித்ததாக வதந்திகள் உலா வருகின்றன. உண்மையில் இந்தச் செய்தி என்னை வெறுப்படைய செய்தது. தொடர்ந்து சிரித்துக்கொண்டே பேசிய அவர் “ நான் எப்போதும் கூறுகிறேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று ஆனால் யாரும் என்னை நம்ப மறுக்கிறார்கள்”என்றார்.

அண்மையில் பிபாஷா பாஷு கொடுத்த மற்றொரு நேர்காணல் ஒன்றில் கர்ப்பம் தரிப்பு மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து பேசிய அவர் “எங்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. உலகம் முழுவதும் ஏராளானமான குழந்தைகள் வறுமையால் வாடுகின்றனர். அவர்களுக்கு வசதிகளை வழங்குவதும் நமது கடமைதான். நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று” என்று பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com