‘பிந்து மாதவி ஆர்மியா?’ - தமிழைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸிலும் கலக்கும் கழுகு நாயகி

‘பிந்து மாதவி ஆர்மியா?’ - தமிழைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸிலும் கலக்கும் கழுகு நாயகி

‘பிந்து மாதவி ஆர்மியா?’ - தமிழைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸிலும் கலக்கும் கழுகு நாயகி

நடிகை பிந்து மாதவி தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டுள்ளார்.

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ் சீசன் 1’ போட்டியில் பங்கேற்ற நடிகை பிந்து மாதவி தற்போது தெலுங்கு நான் ஸ்டாப் பிக்பாஸில் பங்கேற்றுள்ளார். தமிழில் ’வெப்பம்’ படம் மூலம் அறிமுகமான பிந்து மாதவி, தொடர்ந்து ’கழுகு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’பசங்க 2’ படங்களில் நடித்தார். தற்போது சசிக்குமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்திலும் நடித்துள்ளார்.

தமிழ் பிக்பாஸில் கலந்துகொண்டபோதே இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இந்த நிலையில், தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொண்டுள்ளார். இதற்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. பிந்து மாதவி ஆர்மி என ட்விட்டர் மற்றும் #ஹாஷ்டாக்குகள் துவங்கப்பட்டுள்ளன.

தெலுங்கு பிக்பாஸை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் ‘மாயன்’ மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ‘யாருக்கும் அஞ்சேல்’ உள்ளிட்டப் படங்கள் பிந்து மாதவி நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com