மீண்டும் திரைக்கு வரும் அஜித்தின் 'பில்லா'

மீண்டும் திரைக்கு வரும் அஜித்தின் 'பில்லா'
மீண்டும் திரைக்கு வரும் அஜித்தின்  'பில்லா'

அஜித் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான  ‘பில்லா’ மீண்டும் திரைக்கு வருகிறது.

அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகியது. அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்தப்படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமிதா, பிரபு, ரகுமான், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்த இந்தப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். அஜித்திற்கு புதிய பரிணாமத்தை கொடுத்த இந்தப் படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்  ‘பில்லா’ படம் திரைக்கு வர இருக்கிறது. வருகிற மாரச் 12 தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com