படப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்

படப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்

படப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்
Published on

மலையாள படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தில் நடிகர் பிஜூ மேனன் காயமடைந்தார்.

பிரபல மலையாள நடிகர் பிஜூ மேனன். இவர் தமிழில் மஜா, ஜூன் ஆர். தம்பி, அகரம், பழனி, அரசாங்கம், அலிபாபா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ’அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். 

இதில் அய்யப்பனாக பிஜூ மேனனும் கோஷியாக பிருத்விராஜூம் நடிக்கின்றனர். சச்சி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் நடந்து வந்தது. தீ விபத்து காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் நடிகர் பிஜூ மேனனின் கை, மற்றும் கால்களில் பலத்த தீக் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்ட படக்குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com